ஆப்நகரம்

ஸ்கெட்ச் படத்தின் தாடிக்காரா பாடல் வீடியோ!

விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் தாடிக்காரா பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samayam Tamil 5 Jan 2018, 3:25 pm
விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் தாடிக்காரா பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil dhaadikaara song from vikrams sketch movie
ஸ்கெட்ச் படத்தின் தாடிக்காரா பாடல் வீடியோ!


விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச். வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியுள்ளது. வரும் பொங்கலை முன்னிட்டு 12ம் தேதி வெளியாகும் இப்படத்தில், சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, சாரிகா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி-கிரியேஷன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ளது. எஸ்.எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தின் தாடிக்காரா பாடல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்