ஆப்நகரம்

திருநங்கையாக நடித்த நடிகை ஸ்ரீ பல்லவியை பாராட்டும் பிரபலங்கள்!

‘தாதா 87’ படத்தில் நடிகை ஸ்ரீ பல்லவி திருநங்கை கேரக்டரில் நடித்து தற்போது எல்லோரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

Samayam Tamil 4 Mar 2019, 5:30 pm
விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவாகீயுள்ள படம் ‘தாதா 87’. இந்தப் படம் கடந்த வாரம் 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
Samayam Tamil sri-pallavi


இந்தப் படத்தின் கதாநாயகியாக ஸ்ரீ பல்லவி நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர் திருநங்கை கேரக்டரில் நடித்து எல்லோரையும் அசத்தியுள்ளார். இவரது நடிப்பைப் பார்த்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்