ஆப்நகரம்

விரைவில் தனுஷ்- அனிருத் இணையவுள்ளார்கள்!

நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் ஒரு படம் மூலம் இணையவுள்ளார்கள்.

Samayam Tamil 3 Apr 2018, 7:51 pm
நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் ஒரு படம் மூலம் இணையவுள்ளார்கள்.
Samayam Tamil dna


தமிழ் சினிமாவில் இவர்கள் இணைந்தால் அந்தப் படம் நல்லா இருக்கும் என்று ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் எழுந்துள்ளது. அப்படி ரசிகர்கள் மனதில் தோன்றியதுதான், கௌதம் மேனன் -ஏ.ஆர்.ரகுமான், சூர்யா & -ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு - யுவன் அடுத்து கூற வேண்டுமானால் -தனுஷ் - அனிருத்..

ரசிகர்களால் டி.என்.ஏ. என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தது அனிருத் -தனுஷ் கூட்டணி . இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து விட்டார்கள்.ஆகையால் சில வருடங்களாக எந்த படத்திலும் இவர்கள் கூட்டணி அமைக்கவே இல்லை. இதனால் தனுஷ் ரசிகர்களும், அனிருத் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அடுத்த வருடத்தில் (2019) கண்டிப்பாக எங்கள் கூட்டணி அமைய இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்