ஆப்நகரம்

அசுரன் படத்தின் சென்சார் ரிப்போர்ட் இதோ!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Sep 2019, 8:40 pm
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
Samayam Tamil Asuran


பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 4 ஆவது படம் அசுரன். இப்படத்தில், தனுஷ் அப்பா சிவ சாமி, மகன் அறிவானந்தன் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

வேக வேகமாக நடந்து செல்லும் விஜய்: வைரலாகும் வீடியோ!

தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினிகாந்த்!

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அசுரன் படத்தின் விக்கிப்பீடியா பக்கத்தில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியலில் அனுஷ்கா ஷெட்டி பெயர் இடம்பெற்றுள்ளது.

Thalapathy 64 ஃபர்ஸ்ட் அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்: அப்போ இவர்தான் வில்லனா?

இவர் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள போது, அனுஷ்கா ஷெட்டி இப்படத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




அடுத்த செய்தி

டிரெண்டிங்