ஆப்நகரம்

‘மாரி 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ்!

தனுஷ் நடிக்கவுள்ள ‘மாரி 2’ படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

TNN 22 Jan 2018, 4:13 pm
தனுஷ் நடிக்கவுள்ள ‘மாரி 2’ படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
Samayam Tamil dhanush attends to maari 2 movie
‘மாரி 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ்!


தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ‘மாரி 2’ படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ‘மாரி-2’வின் படப்பிடிப்பு இன்று துவங்குவதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இவர்களுடன் கிருஷ்ணா, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து நடிகர் தனுஷ், ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இணைய உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்