ஆப்நகரம்

Dhanush: நம்ப வைத்து கழுத்தறுத்த தனுஷ்... நொறுங்கிப்போன ரஜினி!

நடிகர் ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Apr 2022, 9:54 am
மலைப்போல் நம்பியிருந்த ரஜினியை நடிகர் தனுஷ் ஒரு நொடியில் ஏமாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil dhanush breaks rajinis hope
Dhanush: நம்ப வைத்து கழுத்தறுத்த தனுஷ்... நொறுங்கிப்போன ரஜினி!



பாக்ஸ் ஆபிஸ் கிங்

இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். 70 வயதை கடந்த போதும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பாக்ஸ் ஆபிஸில் கிங்காக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.

பரிதாபத்துக்குரியது

தொழிலில் சக்ஸான ரஜினிகாந்தின் பர்சனல் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. இரண்டு மகள்களை பெற்ற ரஜினிகாந்த் மூத்த மகளை நடிகர் தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தனது மகளின் விருப்பத்திற்காக அவரை விட வயதில் சிறியவரான தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார் ரஜினிகாந்த்.

பயந்தது போல்

வயது வித்தியாசத்தால் பின்னாள் பிரச்சனை வரும் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஐஸ்வர்யா பிடிவாதமாக இருந்ததால் திருமணம் முடிந்தது. இருவரும் இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோராயினர். திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் ரஜினி பயந்தது போலவே நடந்தது. இனி இருவரும் பிரிந்து வாழப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர்.

கெஞ்சிய ஐஸ்வர்யா

அவர்களின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக மகளிடமும் தனுஷிடமும் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. அப்பாவின் கோபத்தை பார்த்து மிரண்டு போன ஐஸ்வர்யா, மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற தனுஷிடம் கெஞ்சினார். ஆனால் தனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என கூறி நழுவினார் தனுஷ்.

வெய்ட் பண்ணுங்க அங்கிள்

இதையடுத்து ரஜினிகாந்த் நேரடியாகவே தனுஷிடம் பேச, கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுங்க அங்கிள்... நான் சொல்கிறேன் என்று கூறியதாக தகவல் வெளியானது. இதனால் எப்படியும் நல்ல சேதி சொல்வார்கள், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்பியிருந்தார் ரஜினிகாந்த்.

தனுஷின் டிவிட்

ஐஸ்வர்யாவும் எப்படியும் குழந்தைகளுக்காகவாது தனுஷ் நம்மிடம் வந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் ஆல்பத்துக்கு வாழ்த்து கூறிய தனுஷ், அவரை தோழி என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அதிர்ச்சியான ஐஸ்வர்யா, இனியும் தனுஷ் தன்னோடு சேர்ந்து வாழ வழி இல்லை என சமூக வலைதள ஹேண்டில்களில் இருந்த தனுஷின் பெயரை நீக்கினார்.

நொந்துப்போன ரஜினிகாந்த்

தனுஷின் இந்த செயலால் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம் ரஜினிகாந்த், கொஞ்சம் பொறுமையாக இருங்க அங்கிள் என்று கூறியதை நம்பி நல்லது நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தனுஷின் இந்த செயல் ரஜினியை நொறுக்கி விட்டதாம். இனி ஐஸ்வர்யா தனக்கு மனைவி இல்லை என்பதை மறைமுகமாகவும் அழுத்தமாகவும் தனது டிவிட்டின் மூலம் கூறி, தனது நம்பிக்கையை தகர்த்து விட்டாரே என நெருக்கமான வட்டாரத்தில் வருத்தப்பட்டு வருகிறாராம் ரஜினிகாந்த்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்