ஆப்நகரம்

இளையராஜா இசையில் மராத்தி மொழி படத்தில் பாடிய தனுஷ்!

இளையராஜா இசையமைக்கும் மராத்தி மொழி படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் நடிகர் தனுஷ்.

Samayam Tamil 22 Feb 2018, 11:03 pm
இளையராஜா இசையமைக்கும் மராத்தி மொழி படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் நடிகர் தனுஷ்.
Samayam Tamil dhanush croons marathi song for ilayaraja
இளையராஜா இசையில் மராத்தி மொழி படத்தில் பாடிய தனுஷ்!


நடிகர் தனுஷ் பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவர் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இளையராஜவின் இசையில் மராத்தி மொழியில் ஒரு பாடலை பாடவுள்ளாராம். தற்போது, தனுஷ் பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்த்து வருகிறார். இந்தப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் இளையராஜா, நடிகர் தனுஷுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது, இயக்குனர் அமோல் படவ் இயக்கும் ‘பிலிக்கர்’ என்ற மராத்தி படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷை ஒரு பாடல் பாட வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளையராஜா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்