ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பாரீஸில் தனுஷ் இரங்கல்

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடிகர் தனுஷ் உரையாற்றியுள்ளார்.

Samayam Tamil 26 May 2018, 6:31 pm
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடிகர் தனுஷ் உரையாற்றியுள்ளார்.
Samayam Tamil dhanush-in-paris
துப்பாக்கிச்சூடு விவகாரம்: பாரீஸில் நடிகர் தனுஷ் இரங்கல்


ஃப்பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகியுள்ள ”தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃப்கீர்” என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். கென் ஸ்காட் என்பவர் இயக்கியுள்ள இந்த படம், அதே பெயரில் வெளியான நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் நடந்து முடிந்த 2018 கேன்ஸ் திரைப்பட விழாவில், ”தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃப்கீர்” படம் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து பாரீஸில் இப்படத்திற்கான விளம்பர பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக பாரீஸ் நகரில் தங்கியுள்ள தனுஷ், நேற்று படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அதில் பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது வருத்தமளிக்கிறது என்றார். மேலும், அதில் உயிரழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும்படி தனுஷ் நிகழ்வில் கேட்டுக்கொண்டார்.

பாரீஸில் இதுதொடர்பாக தனுஷ் பேசியதும், நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதும் வீடியோவாக வெளியாக அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்