ஆப்நகரம்

ஒரே நாளில் டபுள் ட்ரீக் கொடுக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

Samayam Tamil 25 Nov 2019, 12:45 pm
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதத்தின் இறுதியில், வரும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil ஒரே நாளில் டபுள் ட்ரீக் கொடுக்கும் தனுஷ்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.


Radhika Sarathkumar: என்ன சோனமுத்தா போச்சா, இனிமேல் சிகரெட் புடிப்ப: த்ருவ் விக்ரம், ராதிகாவுக்கு நோட்டீஸ்!

மேகா ஆகாஷ், தனுஷ் ஆகியோரது காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்த வாரம் திரைக்கு வருகிறது. முதலில் செப்டம்பர் 6 வெளியாக இருந்தது. அதன் பிறகு செப்டமர் 27க்கு தள்ளிப்போனது. பின்னர் நவம்பர் 15 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மறுபடியும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi: இதெல்லம் சும்மா ஜுஜுபி…கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

ஒருவழியாக வரும் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், நடித்துள்ள தனுஷிற்கு என்னவோ பிரச்சனை இல்லை. ஏனென்றால், அவர் எத்தனையோ படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தையே நம்பியுள்ள மேகா ஆகாஷின் நிலைதான் என்னவோ? அவர் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தப் படமே வெளிவரவில்லை என்றால் என்னதான் செய்வார்? அடுத்து சினிமா வாய்ப்பும் கிடைக்காது என்ற நிலைக்கு தள்ளப்படுவார். இப்படியெல்லாம் பல சிக்கல்களை கொண்டுள்ளார் மேகா ஆகாஷ்.

விஜய்க்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்! எங்க தெரியுமா?

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் போது அவர் ஹாலிட் படத்தில் நடித்துள்ள 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் படம் சீனாவில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 13 ஆயிரம் திரையங்குகளில் இப்படம் சீனாவில் திரையிடப்படுகிறது. இதனை இயக்குநர் கென்ஸ்காட் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது அவருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்