ஆப்நகரம்

Dhanush தளபதியின் திரைத்துறை தம்பி தனுஷ்: எஸ்.ஜே. சூர்யா

விஜய்யின் திரையுலக தம்பி தனுஷ் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

Samayam Tamil 31 Dec 2019, 1:14 pm
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தனுஷ். போஸ்டரில் ப்ரியா பவானி சங்கர் இருக்க வேண்டிய இடத்தில் பொம்மை இருக்கிறது.
Samayam Tamil dhanush


போஸ்டரை பார்த்தாலே படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது. முன்னதாக தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் போவது யார் என்று கண்டுபிடிக்குமாறு கூறி எஸ்.ஜே. சூர்யா ட்வீட் செய்திருந்தார். அதை பார்த்தவர்கள் பல நடிகர்களின் பெயர்களை தெரிவித்திருந்தார்கள். சிலரோ நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

ரசிகர்கள் அளித்த பதில்களை பார்த்த எஸ்.ஜே. சூர்யா ட்வீட்டியதாவது,

பலர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகியோரின் பெயரை கணித்தார்கள். ஆம், பிக் பி சாபின் சக நடிகரும், தலைவரின் மருமகனும், தளபதியின் திரைத்துறை தம்பியும், சர்வதேச நடிகருமான நம் அசுரன் தனுஷ் தான். சந்தோஷம்? என்று தெரிவித்தார்.



Rajinikanth சூர்யா, கார்த்தி, தனுஷ் ஓகே: ரஜினி, தல, தளபதி வேண்டாம்: விஜய் தேவரகொண்டா

தளபதியின் திரைத்துறை தம்பி என்று சரியாக தெரிவித்துள்ளீர்கள் சூர்யா என தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிலரோ தனுஷ் பெயரை நேரடியாக போடாமல் இது என்ன விளையாட்டு என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


2019ல் ரசிகர்களை அதிர வைத்த நயன்தாரா, சமந்தா, அமலா, மஞ்சு, ஐஸ்

பொம்மை படத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டு திரைத்துறை தம்பியை பற்றித் தான் அதிகம் பேசப்படுகிறது. மான்ஸ்டர் படத்தை அடுத்து எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பொம்மை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்