ஆப்நகரம்

Rowdy Baby Song: இணையத்தை கலக்கி வரும் மாரி 2வில் இருந்து ரவுடி பேபி பாடல்

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘மாரி 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக்கான ‘ரவுடி பேபி’ பாடல் இன்று யூ டியூபில் வெளியாகி டிரண்டாகி வருகிறது.

Samayam Tamil 28 Nov 2018, 12:53 pm
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், ஒரு ஸ்டைல் டிரண்டை படம் உருவாக்கியது. அதற்கு இப்படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் முக்கிய காரணம் என கூறலாம்.
இந்நிலையில், இப்போது அந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளிவர உள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று வெளியான ரவுடி பேபி பாடலை தனுஷே பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடல் டிரண்டாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்