ஆப்நகரம்

திடீரென வைரலாகும் தனுஷ் படத்தின் போஸ்டர்!

தனுஷ் நடிப்பில் உருவாவதாக இருந்த படம் ஒன்றின் போஸ்டர் திடீரென இணையதளங்களில் உலாவி வருகிறது.

Samayam Tamil 31 Mar 2020, 3:03 pm
தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் படத்தில் நடித்து முடித்துவிட்டு, இந்தி படத்துக்காக மும்பை பக்கம் ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பும் வர, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அனைவருமே வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், வேறு எந்த போஸ்டரும் கிடைக்காததால் தனுஷ் ரசிகர்கள் கைவிடப்பட்ட பழைய படம் ஒன்றின் போஸ்டர் வைரலாக்கியுள்ளனர்.
Samayam Tamil dhanush poster




ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் தான் அது. புதுப்பேட்டை படத்தில் நடித்து முடித்த பிறகு, தனுஷ் நடிக்க வேண்டிய படம் இதுதான். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை படம் கைவிடப்பட்டது.

திருடன் போலீஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருந்த படத்தின் போஸ்டரில் தனுஷ் தாடியுடன் எதையோ பார்த்து முறைப்பது போல அமைந்திருக்கும். இந்த படத்துக்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் இந்த போஸ்டரை அதிகம் பேர் ஷேர் செய்து வருகிறார்கள்.

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன், இந்தி படம் என வரிசையாக பல படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் அடுத்ததாக கார்த்திக் நரேன் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் ஸ்கிரிப்ட் வேலைகளை வீட்டிலிருந்தபடியே கார்த்திக் நரேன் பார்த்துவருகிறார். எனினும் தனுஷ் படங்கள் குறித்து பெரிய அப்டேட்கள் எதுவும் இல்லாததால் தனுஷ் ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். மேலும் திருவிளையாடல் ஆரம்பம் படமும் ட்ரெண்ட் ஆனது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்