ஆப்நகரம்

தனுஷூக்கும் ஜூலைக்கும் ராசியா? தள்ளிப்போகும் விஐபி2!

நடிகர் தனுஷுக்கும், ஜூலை மாதத்திற்கும் உள்ள ராசியால் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.

TNN 19 Jul 2017, 5:22 pm
நடிகர் தனுஷுக்கும், ஜூலை மாதத்திற்கும் உள்ள ராசியால் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil dhanush movie vip 2 postponed
தனுஷூக்கும் ஜூலைக்கும் ராசியா? தள்ளிப்போகும் விஐபி2!


நடிகர் தனுஷ் - அமலா பால் ஆகியோரை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படம் 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கஜோல், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம், தனுஷின் பிறந்தநாளான 28ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் மாற்றம் இருக்கலாம் என தற்போது தெரியவந்துள்ளது. காரணம். திட்டமிட்டபடி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியவில்லையாம். இதனால் சொன்ன தேதியில் இருந்து 10 நாட்களுக்குப் பிறகு வெளியாகலாம் என்கிறார்கள்.

இதற்கு முன்னர் வெளியான ‘விஐபி’, ‘மாரி’ இரண்டுமே ஜூலை மாதத்தில் வெளியானவைதான். எனவே, தனுஷுக்கும், ஜூலை மாதத்திற்கும் ராசி உள்ளது என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்