ஆப்நகரம்

Beast Mode: தளபதி விஜய்க்கு தரமான பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய நடிகர் தனுஷ்!

தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விஜய்க்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

Samayam Tamil 22 Jun 2021, 12:20 pm
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளர்கள் விரும்பும் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய், இன்றைய தினம் தனது 47வது பிறந்தநாள் தினத்தை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Vijay_Dhanush
Vijay_Dhanush


நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் விஜய். ஒவ்வொரு பிறந்தநாளிலும் விஜய்யின் வயது குறைந்து, இளமை கூடுவதை போல் அவரின் நடை, உடை, பாவனை, தோற்றம் அனைத்திலும் ஒரு இளமை எட்டி பார்க்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நள்ளிரவு பர்த்டே சர்ப்ரைஸாக பீஸ்ட் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனால் டபுள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Beast: இனிமே தான் ஆரம்பமே.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் நள்ளிரவு பர்த்டே ட்ரீட்!
இந்நிலையில் தி கிரேமேன் பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். நேற்றைய தினம் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தினை குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், எப்பவுமே இதே பீஸ்ட் மோடுலயே இருங்க குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள், தனுஷ் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை வழக்கம் போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் விஜய்யின் பெயரில் ஹேஸ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய திரை பிரபலங்கள் பலரும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கையும் ஷேர் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்