சென்னை: நடிகர் தனுஷ் விரைவில் சிறப்பு விருந்து ஒன்றை அளிக்கப் போகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் - ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வட சென்னை’.
இதில் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடெக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. கேங்ஸ்டர் கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘வட சென்னை’ படத்தை, வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில் மூன்று வருட கடின உழைப்பில் உருவான ‘வட சென்னை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 8ல் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் ... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று.— Dhanush (@dhanushkraja) March 3, 2018 Dhanush surprise treat on International Womens Day Vada Chennai.