ஆப்நகரம்

தனுஷின் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

TNN 14 Dec 2017, 3:10 pm
தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
Samayam Tamil dhanush to start maari 2 movie shooting today
தனுஷின் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!


தனுஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் மாரி. பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் ஜனவரி மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். தனுஷ் தற்போது கௌதம் மேன்ன் இயக்கத்தில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் படத்தைப் போன்று இல்லாமல், இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கயிருக்கிறார். இதற்காக மீசை – தாடியை எடுத்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்ட படத்தில் தனுஷ் பிஸியாக இருப்பதால், இவர் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்