ஆப்நகரம்

தனுஷ் தயாரிப்பில் உருவான ‘மரடோனா’ மே மாதம் ரிலீஸ்!

தனுஷ் தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘மரடோனா’ படம் மே மாதம் ரிலீஸாகவுள்ளது.

Samayam Tamil 12 Apr 2018, 5:38 pm
தனுஷ் தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘மரடோனா’ படம் மே மாதம் ரிலீஸாகவுள்ளது.
Samayam Tamil maradona


நடிகர் தனுஷ் நடிப்புடன், படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது நடிகர் தனுஷ் மலையாளத்தில் ‘மரடோனா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனமும், தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் சேர்ந்து தயாரித்து வருகின்றன.

தனுஷின் முதல் தயாரிப்பு மலையாள படமான ‘தரங்கம்‘ படத்தில் ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஷர்மிளா நாயர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு நாராயணன் இயக்கி வருகிறார். இந்தப்படம் வரும் மே மாதம் ரிலீசாக இருக்கிறது..

அடுத்த செய்தி

டிரெண்டிங்