ஆப்நகரம்

திடீரென வைரலாகும் தனுஷ் - த்ரிஷா புகைப்படம்!

தனுஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 2 Apr 2020, 2:36 pm
தனுஷ் நடிப்பில் தேசிய விருது வாங்கிய படம் ஆடுகளம். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருப்பார். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்களம். சுவாரசியமாகவும் எதார்த்தமாகவும் எடுக்கப்பட்ட இந்த படம் மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை கண்ணுக்கு முன் நிறுத்தியது எனலாம். இந்த படத்தில் கேபி கறுப்பு எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார்.
Samayam Tamil dhanush and trisha



இந்நிலையில் ஆடுகளம் படத்தின் ஹீரோ - ஹீரோயின் காட்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஹீரோவாக தனுஷும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்த காட்சியின் புகைப்படம். டாப்ஸிக்கு முன்னதாக இந்த படத்தில் ஒப்பந்தமானவர் த்ரிஷாதான். அதே நேரத்தில் இந்த படத்தில் முதன்முதலில் ஒப்பந்தமானவர் ஷ்ரேயா சரண். ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையில் வெளியேறவே த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு சில காட்சிகள் த்ரிஷாவை வைத்து எடுத்தபிறகு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், கால்ஷீட் பிரச்னை காரணமாக த்ரிஷாவும் விலகிவிட்டதாகவே தெரிகிறது. இதனால் அடுத்த ஹீரோயினாக டாப்ஸியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தனுஷ் - த்ரிஷா நடிப்பில் இந்த காட்சி தற்போது இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்