தனுஷ் ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் என்றும் அசத்தி வருகிறார். தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது என ஏராளமான விருதுகளையும் குவித்து வருகிறார். நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
Meena: 13 வருடங்களில் முடிந்த மண வாழ்க்கை... தெரிந்துதான் அப்படி ஒரு பதிவை போட்டீங்களா மீனா!
உடன்பாடு இல்லை
இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா தனுஷை பிரிந்து வாழ்வதில் நடிகர் ரஜினிகாந்துக்கு உடன்பாடு இல்லை என்றும், ஐஸ்வர்யா கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பியதாகவும் தகவல் வெளியானது.
புதிய அவதாரத்தில் தனுஷின் மாஜி அண்ணி!
மீண்டும் சேர்ந்து வாழ
இதையடுத்து ஐஸ்வர்யா தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் தனுஷ், பிரிவதாக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு, தன்னால் உடனடியாக மனதை மாற்றிக் கொள்ள முடியாது என கூறியதாகவும் தகவல் வெளியானது.
தனுஷ் விருப்பம்
இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகன்களுடன் நேரத்தை செலவழித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pavithra Lokesh: பணத்திற்காக 60 வயது நடிகரை திருமணமா? நடிகை பவித்ரா பரபரப்பு தகவல்!
நம்பிக்கை இல்லை
ஆனால் ஐஸ்வர்யா, தனுஷ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சற்று பொறுத்திருந்து முடிவு எடுக்கலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தில் விரைவில் குட் நியூஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.