ஆப்நகரம்

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா; இந்தியன் பனோரமாவில் 'அசுரன்', 'தேன்' தேர்வு!

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான தமிழ் படங்கள் குறித்து இங்கு காணலாம்.

Samayam Tamil 19 Dec 2020, 4:45 pm
1-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' தேர்வாகியுள்ளது. அசுரன் மட்டுமின்றி கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேன்' திரைப்படமும் இந்தியன் பனோரமாவில் தேர்வாகியுள்ளது. பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்ட 'அசுரன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வெற்றிமாறன் - தனுஷ் படங்களில் அசுரன் தனியான முத்திரை பதித்திருக்கிறது.
Samayam Tamil Asuran


இந்நிலையில், இதன் அடுத்தகட்ட சாதனையாக, 2020 இந்தியன் பனோரமாவிலும் அசுரன் இடம்பிடித்திருக்கிறது. தமிழில் 'அசுரன்' மட்டுமின்றி கணேஷ் விநாயகன் இயக்கிய தேன் திரைப்படமும் இந்தியன் பனோரமாவிற்கு தேர்வாகியுள்ளது.

கோவாவில் வருகின்ற 2021 ஜனவரி 16 முதல் 24 வரை 8 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.

அசுரன் முருகனா இது? - ஏ.ஆர். ரஹ்மான் இசையில் புதிய படம்!

இந்த ஆண்டு மொத்தம் 23 படங்கள் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியில் 'ஆவர்தன்', 'சாந்த் கி ஆங்க்', மலையாளத்தில் 'சேஃப்', 'ட்ரான்ஸ்', 'கேட்டியோலானு என்டே மாலகா', 'தாஹிரா' ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

தெலுங்கு மொழியிலிருந்து கிரண் கொண்டமடுகுலா இயக்கிய 'கதம்' தேர்வாகியுள்ளது. கன்னடத்தில் 'பிங்கி எல்லி' படம் தேர்வாகியிருக்கிறது. தமிழில் தேர்வாகியுள்ள அசுரன், தேன் ஆகிய படங்களில் 'அசுரன்' வெகுஜன திரைப்பட பிரிவில் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்