ஆப்நகரம்

Dhanush: முதல் ஹாலிவுட் படத்திலேயே தனுஷ்க்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது!

நேரடியாக ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’என்ற ஹாலிவுட் படத்திற்கு நடிகர் தனுஷ்க்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது கிடைத்துள்ளது.

Samayam Tamil 3 May 2019, 11:08 am
‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’என்ற ஹாலிவுட் படத்திற்கு நடிகர் தனுஷ்க்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது கிடைத்துள்ளது.
Samayam Tamil Dhanush


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் மாரி 2. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், தனுஷின் நேரடியான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’என்ற ஹாலிவுட் படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது (The Audience Award For Best Comedy) கிடைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரையில், ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா சாண்ட்-ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில், தனுஷ் நடிப்பில் உருவான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் என்ற ஹாலிவுட் படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கடந்தாண்டு, கேன்ஸ் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த இப்படம், சமீபத்திய நார்வே திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டது. அதில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் படத்துக்கு ‘தி ரே ஆஃப் ஷன்ஷைன் என்ற முக்கிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்