ஆப்நகரம்

மீண்டும் டானு டானு டானு! - டிசம்பர் 21ல் மாரி ‘2’ ரிலீஸ்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படம் டிசம்பர் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 11 Sep 2018, 1:54 pm
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படம் டிசம்பர் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Samayam Tamil maar22


நடிகர் தனுஷ் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘மாரி 2’. முதல் பாகத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். மேலும் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், வித்யா பிரதீப், ரோபோ ஷங்கர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

‘மாரி’ படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் ‘மாரி 2’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அடுத்ததாக நடிகர் தனுஷ், இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன் ‘வடசென்னை’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட் படமான ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் ‘மாரி 2’ படம் ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். தற்போது வந்துள்ள தகவலின் படி, ‘மாரி 2’ படம் டிசம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்