ஆப்நகரம்

Dhanush: மிரட்டினார்... ரகுவரன் குறித்து உருகிய தனுஷ்... வைரலாகும் த்ரோபேக்!

Dhanush: நடிகர் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பகிர்ந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 6 Aug 2022, 12:55 pm
நடிகர் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பகிர்ந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil dhanushs throwback about raghuvaran goes viral
Dhanush: மிரட்டினார்... ரகுவரன் குறித்து உருகிய தனுஷ்... வைரலாகும் த்ரோபேக்!



ரகுவரன்

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகர் ரகுவரன். காக்க என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் ஏழாவது மனிதன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். 1980களில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் ரகுவரன்.

மிரட்டல் நடிப்பு

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் பட்டையை கிளப்பிய ரகுவரன் வில்லனாகவும் மிரட்டி முத்திரை பதித்துள்ளார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் ரகுவரன். ஒவ்வொரு படத்திலும் அவருடைய கதாப்பாத்திரமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

தனுஷ் உருக்கம்

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருந்தார் ரகுவரன். ரகுவரன் மரணமடைந்து 15 நாட்கள் கழித்து இந்தப் படம் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தில் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பகிர்ந்த த்ரோபேக் தற்போது வைரலாகி வருகிறது.

சிரமப்பட்டேன்

அதில் ரகுவரனுடன் ஒரே ஃபிரேமில் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாக கூறியுள்ளார் தனுஷ். ரகுவரன் நடிப்பில் மிரட்டுவார் என்பதால் ரொம்பவே சிரமப்பட்டு நடித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் அப்பா மகனாக தங்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க்கவுட் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். ரகுவரன் குறித்து தனுஷ் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்