ஆப்நகரம்

வடசென்னை - 7 நாளில் 70 கோடி வசூலா..?

உலகம் முழுவதும் வெளியான ‘வட சென்னை’ படம் ஒரு வாரத்தில் இத்தனை கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 23 Oct 2018, 2:38 pm
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வட சென்னை’. இந்தப் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி வெற்றிமாறன் படத்தை கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தனர். அப்படியிருந்தும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
Samayam Tamil vada-chennai


இந்நிலையில் ‘வட சென்னை’ உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 45 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். எப்படியும் தீபாவளி வரை பெரிய படங்கள் வராததால், ரூ 70 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்