ஆப்நகரம்

ஆகஸ்ட் 12-ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'தர்மதுரை'

விக்ரம் பிரபுவின் 'வாகா'. தனுஷின் 'தொடரி' படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படத்தையும் சுதந்திர தின விடுமுறையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

TNN 17 Jul 2016, 6:10 pm
சென்னை: விக்ரம் பிரபுவின் 'வாகா', தனுஷின் 'தொடரி' படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படத்தையும் சுதந்திர தின விடுமுறையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil dharmadurai eyes august 12th release
ஆகஸ்ட் 12-ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'தர்மதுரை'


சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் இசை மே 9 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இம்மாதம் இறுதியில் தர்மதுரை இசை வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிராமப்புற ரொமேண்டிக் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஆர்.கே.சுரேஷின் 'ஸ்டுடயோ 9' நிறுவனம் தயாரித்துள்ளது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தில் நடிகை தமன்னா முதன் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்