ஆப்நகரம்

தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இரைப்பை தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

PTI 21 Dec 2016, 11:30 am
மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இரைப்பை தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Samayam Tamil dharmendra admitted to mumbai hospital is doing fine now
தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி


மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் நேற்று பிற்பகல் அனுமதிக்கப்பட்ட தர்மேந்திராவுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். தர்மேந்திராவுக்கு குடலில் தோற்று ஏற்பட்டதன் காரணமாக பாந்தி, வயிற்ருப்போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என நானாவதி மருத்துவமனை மருத்துவர் விசேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Just to reassure everyone concerned abt Dharamji in hospital - he is recovering well & is likely to be discharged soon. Thank u all — Hema Malini (@dreamgirlhema) December 20, 2016 மேலும், நடிகர் தர்மேந்திராவின் மனைவியும், நடையும், பா.ஜ.க. எம்.பியுமான ஹேமமாலினி தனது டுவிட்டர் பக்கத்தில் தர்மேந்திரா நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்துக் கொண்டவர்களுக்கு நன்றி எனவுக் குறிப்பிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா சமீபத்தில் தனது 81வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Veteran actor Dharamendra has been admitted to a hospital here as he was suffering from gastro infection and is on recovery path now.

அடுத்த செய்தி

டிரெண்டிங்