ஆப்நகரம்

சியானுடன் நடிக்க டிடிக்கு வாய்ப்பு: நடிக்க அழைத்த கவுதம் மேனன்

சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார் டிடி எனும் திவ்யதர்ஷினி.

TNN 29 Jun 2017, 7:07 pm
சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார் டிடி எனும் திவ்யதர்ஷினி.
Samayam Tamil dhivyadharshini acting in vikrams dhruva natchathiram
சியானுடன் நடிக்க டிடிக்கு வாய்ப்பு: நடிக்க அழைத்த கவுதம் மேனன்


தமிழ் சினிமாவில் மாதவன் நடித்த நளதமயந்தி, விசில், பைவ் பை ஃபோர் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வெள்ளித்திரையில் வலம் வந்தவர் நடிகை திவ்யதர்ஷினி (டிடி). அதன் பிறகு சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இந்நிலையில், தனுஷ் நடித்த ப.பாண்டி படத்தில் நடிக்க வெள்ளித்திரைக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. பல்கேரியாவில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், டிடி முதன் முறையாக முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.

சியான் விக்ரம் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் ஹீரோயினாக நடிக்கின்றனர். இந்த கூட்டணியில் பார்த்திபனும் இணைந்துள்ளார். மேலும், சிம்ரன், ராதிகா ஆப்தே, சதீஷ், வம்சி, திவ்யதர்ஷினி ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்