ஆப்நகரம்

DD images யக்கா, டிடி அக்கா, நயனுக்கே டஃப் கொடுக்கிறியேக்கா!

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு பட்டையை கிளப்பி வருகிறார் டிடி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Samayam Tamil 9 Mar 2020, 4:17 pm
தனியார் தொலைக்காட்சியின் முக்கியத் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி. சமூக வலைதளங்களில் இவருக்கு ரசிகர்கள் அதிகம். முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக இணைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தொகுத்து வழங்க முதலில் அழைக்கப்படுபவர் என்ற பெருமைக்கு உரியவர். காரணம் இவரது பேச்சு தனித்துவமாகவும், நகைச்சுவை கலந்தும் இருக்கும். இது பெரிவாரி மக்களால் அதிகம் ரசிக்கப்படும்.
Samayam Tamil dhivyadharshini latest photoshoot went viral on internet
DD images யக்கா, டிடி அக்கா, நயனுக்கே டஃப் கொடுக்கிறியேக்கா!



தொகுப்பாளர்களிலேயே மிகவும் தனித்தன்மையோடு, இத்தனை ஆண்டு காலம் இந்த துறையில் பணியாற்றி வருபவர் டிடி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், சினிமா விழாக்களிலும் தனது சாதுர்யமான பேச்சால் பல கவுண்டர்களை கொடுத்து அனைவரையும் கவரக்கூடியவர் என ரசிகர்கள் இவரை புகழ்ந்து வருகிறார்கள். சின்னத்திரையின் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் பாராட்டப்பட்டு வருகிறார் டிடி.


திவ்யதர்ஷினி படப்பிடிப்பு நேரங்கள் தவிர்த்த மற்ற நேரங்களில், ஃபோட்டோஷூட் செய்து, தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்வார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தவர்கள், நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பீங்க போலிருக்கே என பாராட்டி வருகின்றனர்.

ஒன் சைடு ஸ்லீவ் லெஸ்ஸில் அழகிய போஸ் கொடுத்துள்ள டிடியின் புகைப்படங்களை இங்கு காணுங்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்