ஆப்நகரம்

தமிழகத்தில் தோனி வசூல் சாதனை!

தமிழகத்தில் தோனி வசூல் சாதனை!

Samayam Tamil 1 Oct 2016, 3:00 pm
தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ள தோனி திரைப்படம் முதல் நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil dhoni the untold movie collection in tamilnadu
தமிழகத்தில் தோனி வசூல் சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழக்கை வரலாறை “தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி” என்ற பெயரில் நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஹிந்தி இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாளில் ஹிந்தியில் வெளியான தோனி 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட தோனி திரைப்படம் ஒரே நாளில் 2.2 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு படம் ஒரே நாளில் இவ்வளவு தொகை வசூல் செய்வது இதுவே முதல் முறையாகும்.

Dhoni – the untold story movie first day collection record break in tamilnadu.

அடுத்த செய்தி

டிரெண்டிங்