ஆப்நகரம்

துருவ் விக்ரமை அடுத்து இயக்கும் தனுஷ் பட இயக்குனர்

ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் தன் இரண்டாவது படத்திற்காக முன்னணி இயக்குனருடன் கூட்டணி சேர்கிறார்.

Samayam Tamil 4 Mar 2020, 2:52 pm
சீயான் விக்ரமின் மகன் துருவ் ஆதித்ய வர்மா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம்.
Samayam Tamil Dhruv Vikram


படத்தை பார்த்தவர்கள் துருவ்வின் நடிப்பை அதிகம் பாராட்டினார்கள். முதலில் பாலா இயக்கத்தில் உருவான படம் சரியில்லை என அதை முழுவதும் நிராகரித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து அர்ஜுன் ரெட்டி துணை இயக்குனர் கிரிசையாவை வைத்து படமாக்கினார்கள்.

இந்த படத்திற்கு பிறகு துருவ் தன் இரண்டாவது படத்தை தற்போது வரை அறிவிக்கவில்லை. துருவ் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிக்கிறார் என இப்போது தகவல் கசிந்துள்ளது.

தனுஷின் கர்ணன் படம் இயக்கிவரும் மாரி செல்வராஜ் அது முடிந்தபிறகு துருவ் விக்ரம் படத்தை இயக்குகிறார். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரவில்லை. விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ணன் பட ஷூட்டிங் இறுதிகட்டத்தில் இருக்கிறது. 95 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது என தனுஷ் ட்விட்டரில் சில வாரங்கள் முன்பு கூறியிருந்தார்.இறுதி கட்ட ஷூட்டிங் இந்த மாதம் நடைபெறவுள்ளது.

அதனால் துருவ்-மாரி செல்வராஜ் படம் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்