ஆப்நகரம்

இறுதிகட்டத்தில் இருக்கும் ‘துருவா’!

‘துருவா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

TOI Contributor 5 Oct 2016, 4:07 pm
‘துருவா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
Samayam Tamil dhuruva film in the final stage
இறுதிகட்டத்தில் இருக்கும் ‘துருவா’!


இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழில் உருவான படம் ‘தனி ஒருவன்’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினியாகவும், அரவிந்த்சாமி வில்லனாகவும் நடித்து இருந்தனர். மேலும் படத்தில் நாசர், தம்பி ராமையா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழில் வெளியான ‘தனி ஒருவன்’ படம் ரசிகர்கள் வரவேற்புடன் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது.
‘தனி ஒருவன்’ படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி ‘துருவா’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நிறைவு செய்ய 6 நாட்களே உள்ளன. தீபாவளிக்கு இந்தப் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்