ஆப்நகரம்

Nayanthara புத்தாண்டில் தண்ணி அடிச்சிட்டு நயன்தாராவிடம் டோஸ் வாங்கிய விக்கி?

இயக்குநர் விக்னேஷ் சிவன் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.

Samayam Tamil 2 Jan 2020, 12:38 pm
எந்த பண்டிகை வந்தாலும் அதை நயன்தாரா தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். புத்தாண்டையும் அவருடன் தான் கொண்டாடியிருக்கிறார். வழக்கமாக எந்த பண்டிகையை கொண்டாடினாலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகும்.
Samayam Tamil nayanthara


சரி, புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறாரா என்று போய் பார்த்தால் வீடியோ இருந்தது. வீடியோவில் நயன்தாரா இல்லை. மாறாக சிவாஜி கணேசன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தள்ளாடி வர அவரை பார்த்த கே. ஆர். விஜயா என்னங்க இது, எந்த பாவி உங்கள குடிக்க வச்சான் என்று கேட்டு அழுகிறார்.

சிவாஜி, கே. ஆர். விஜயா வீடியோவை வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது,

ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி....குடிக்க வேண்டாம், குடித்துவிட்டு அசிங்கப்பட வேண்டாம், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம், குடிப்பதை நிறுத்துங்கள், குடி உயிரைக் குடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram 1st jan Morning 6 o’clock .... 😔😔😔😔 #stopdrinking #StopGettingEmbarrased #dontdrinkanddrive #stopdrinking #saynotoalcohol #drinkingkills #DontDrink A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on Jan 1, 2020 at 9:23am PST

Jwala Gutta விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட ஜுவாலா

வீடியோவையும், விக்கி எழுதியுள்ளதையும் பார்த்தவர்கள்,

என்ன அன்பான இயக்குநரே மூக்கு முட்ட குடித்துவிட்டு நயன்தாராவிடம் பல்பு வாங்கினீர்களா?. நல்லா வேணும். குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்தும் குடிக்கலாமா?. உங்களை நயன்தாரா திட்டியிருக்கக் கூடாது, நல்லா நாலு சாத்து சாத்தியிருக்கணும் என்று தெரிவித்துள்ளனர்.

'திருமதி' ஆன பிரபல டிவி சீரியல் நடிகை ஸ்ரிதிகா: வீடியோ இதோ

அடுத்த செய்தி

டிரெண்டிங்