ஆப்நகரம்

நாயகி வாய்ப்பு இல்லாததால் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகை த்ரிஷா!

ஹீரோயினி வாய்ப்பு கிடைக்காததால் தற்போது நடிகை த்ரிஷா கிடைத்த கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 16 Apr 2018, 6:41 pm
ஹீரோயினி வாய்ப்பு கிடைக்காததால் தற்போது நடிகை த்ரிஷா கிடைத்த கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil trisha-dileep


நடிகை த்ரிஷா தற்போது நிவின்பாலிக்கு ஜோடியாக ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இதுதான் த்ரிஷாவின் முதல் மலையாள படம். இதற்குமுன் த்ரிஷாவுக்கு மலையாளத்தில் நடிக்க பலமுறை வாய்ப்புகள் வந்தது. முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைக்கூட இவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். காரணம் அவர் எதிர்பார்த்த சம்பளம் அங்கு தரமறுத்துவிட்டனராம். ஆனால், இப்போது இவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஆகையால்தான் மலையாள படத்தில் குறைந்த சம்பளமானாலும் பரவாயில்லை என்று நடிக்க சம்மதித்தார்.

மேலும் திலீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளார் நடிகை த்ரிஷா. இது ஒரு 3டி சம்பந்தப்பட்ட படம். இந்தப் படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடிகை நமீதா பிரமோத் நடிக்கிறார்.

வாய்ப்பு வந்தபோதே பயன்படுத்த தெரியாத நடிகை த்ரிஷா, தற்போது கெஸ்ட் ரோலில் நடிப்பது வேதனையளிக்கிறது என்று கோலிவுட்டில் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்