ஆப்நகரம்

விஜய் சேதுபதி படத்தில் இணையும் திண்டுக்கல் லியோனியின் மகன் சிவக்குமார்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமனிதன்’ படத்தில் சன் டிவி பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் சிவக்குமாரும் நடிக்கிறார்.

Samayam Tamil 9 Jan 2019, 3:55 pm
பிரபல பட்டிமன்ற பேச்சாளராக இருந்து வருபவர் திண்டுக்கல் லியோனி. இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவர் பிரபலமானவர். இவர் பல பட்டிமன்றங்களில் திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரையுலகினர்களை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு அரசியல் பக்கம் தனது பேச்சை மாற்றினார். இவர் திமுகவின் விசுவாசி. இவரது பேச்சில் அதிகமாக திமுக வாடை இருக்கும்.
Samayam Tamil sivakumar


இந்த நிலையில் லியோனியின் மகன் சிவக்குமாரும் தற்போது திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார். விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ படத்தில் சிவக்குமாரும் நடிக்கிறார். இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தில் லியோ சிவகுமாருக்கு முக்கிய கேரக்டர் ஒன்றை கொடுத்துள்ளார் இயக்குனர்.

இந்தப் படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் இசையமைக்கின்றனர். படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி மீண்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்