ஆப்நகரம்

விக்ரமின் அடுத்தப் படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து!?

பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 8 Dec 2018, 4:48 pm
நடிகர் விக்ரம் தற்போது ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல் தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
Samayam Tamil vikram


அடுத்ததாக விக்ரம் இணையவுள்ள இயக்குனரின் பெயர் வெளியாகியுள்ளது. விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது அஜய் ஞானமுத்து. இவர் இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’.

விக்ரமை வைத்து இயக்கும் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்