ஆப்நகரம்

ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கும் பிரேமம் பட இயக்குனர்: டவுட்டை கிளியர் பண்ணுவாரா கமல்..?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படம் குறித்து தனது வலைத்தள பக்கத்தில் பெருமையாக குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

Samayam Tamil 15 Jun 2021, 1:20 pm
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் அதிகம் அறியப்படும் ஒரு பெயர் அல்போன்ஸ் புத்திரம். தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பிரேமம் திரைப்படத்தை இயக்கிய இவர், அண்மை காலமாக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Samayam Tamil Kamal_Haasan
Kamal_Haasan


கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 'பிரேமம்' திரைப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் கழித்து படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவலை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

ஜார்ஜ் என்ற இளைஞனின் வாழ்க்கையில் பல்வேறு கால கட்டங்களில் நடக்கும் மூன்று காதல் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது. அதிலும் குறிப்பாக சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கேரக்டருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்மையில் மலர் டீச்சர் குறித்தும், படத்தில் இடம்பெற்ற தமிழ் மொழியின் தாக்கம் குறித்தும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார் அல்போன் புத்திரன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சருடன் விஜய் சேதுபதி சந்திப்பு: கொரோனா நிவாரண நிதி வழங்கினார்!
இந்நிலையில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் ரிலீசாகி நேற்றுடன் 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனைக் கொண்டாடும் விதமாக இன்ஸ்டாகிராமில் தான் தோன்றிய 10 கதாபாத்திரங்கள் பற்றி தனித்தனியாகவும், மொத்தமாகவும் போட்டோ வெளியிட்டு, விளக்கம் அளித்துள்ளார் கமல்ஹாசன். அவரின் இந்த பதிவை பார்த்து விட்டு தான் ஒருசில டவுட்களை கமலிடம் கேட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது வலைத்தள பக்கத்தில், கமலஹாசன் சார், மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என சொல்ல முடியுமா? படம் இயக்குவதில் தசாவதாரம் பிஎச்டி போன்றது. மைக்கேல் மதன காம ராஜன் டிகிரி கோர்ஸ் போன்றது எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்