ஆப்நகரம்

காயத்துடன் நடித்த நடிகரை புகழ்ந்த இயக்குனர்!

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த ஜி.வி. பிரகாஷை இயக்குனர் எம்.ராஜேஷ் புகழ்ந்துள்ளார்.

TOI Contributor 16 Sep 2016, 4:42 pm
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த ஜி.வி. பிரகாஷை இயக்குனர் எம்.ராஜேஷ் புகழ்ந்துள்ளார்.
Samayam Tamil director appreciated g v prakash why
காயத்துடன் நடித்த நடிகரை புகழ்ந்த இயக்குனர்!


ஜி.வி. பிரகாஷ் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குனர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் ஸ்கிரீப் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தின் தலைப்பை வைத்தவர் ஜி.வி. பிரகாஷ்தான். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது அடிக்கடி ஜி.வி. பிரகாஷுக்கு அடிபட்டுக் கொண்டே இருக்கும். அதையும் பொருட்படுத்தாமல் பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்தார். அதற்கு காரணம் அவருக்கு நடிப்பு மீதுள்ள ஆர்வத்தை என்னால் உணர முடிந்தது’’ என்றார் இயக்குனர் ராஜேஷ்.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் டி.சிவா தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்