ஆப்நகரம்

‘கனா’வைப் பாராட்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ‘கனா’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 3 Jan 2019, 3:56 pm
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ வெற்றிப் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்ததாக இவர் நடிகர் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil kana-murugadoss


இந்நிலையில் அவர், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கனா’ படத்தைப் பார்த்துள்ளார். அந்தப் படத்தை ட்விட்டரில் புகழ்ந்துள்ளார்.. இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.
https://twitter.com/ARMurugadoss/status/1080511098879586304
இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், டுவிட்டரில், ‘‘ விவசாயத்தையும் கிரிக்கெட்டையும் இணைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்த ஒரு ஐடியா எனக்கு பிடித்திருந்தது. கிளைமாக்ஸ் காட்சி என் மனதை தொட்டு விட்டது’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்