ஆப்நகரம்

முழுக்க முழுக்க காமெடி படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு!

காமெடி நடிகர் யோகி பாபு, முழுக்க முழுக்க உருவாகி வரும் காமெடி படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 19 Sep 2018, 1:15 pm
காமெடி நடிகர் யோகி பாபு, முழுக்க முழுக்க உருவாகி வரும் காமெடி படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil Yogi-Babu1


நடிகை நயன்தாராவை வைத்து ‘மாயா’ என்ற திகில் படத்தை இயக்கியவர் அஸ்வின். இவர் அடுத்ததாக நடிகர் யோகி பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இவர் இயக்கவுள்ள படம் ‘ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும் இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. யோகிபாபு ஹீரோவாக நடிக்க மாட்டேன் என சமீபத்தில் கூறியிருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்தப் படத்தை ஒய்நாட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்