ஆப்நகரம்

விஜய்யின் புதிய படத்திற்கான செட்டை பார்வையிடும் இயக்குனர் அட்லி!

விஜய்யின் நடிக்கவுள்ள புதிய படத்திற்கான செட் அமைக்கும் பணிகளை இயக்குனர் அட்லி பார்வையிட்டுள்ளார்.

Samayam Tamil 29 Nov 2018, 7:46 pm
நடிகர் விஜய் ‘சர்கார்’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்து அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தக் கூட்டணி ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையக்கிறார். .இந்தப் பிரம்மாண்ட படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் தொடங்குகிறது.
Samayam Tamil vijay-atlee


இந்நிலையில், நேற்று முதல் விஜய்யின் புதிய படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் உள்ள பின்னி மில்லில் செட் போடப்படுகிறது. இந்த செட்டை இயக்குனர் அட்லி பார்வையிட சென்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்