ஆப்நகரம்

D44 படத்தில் இணைந்த பாரதிராஜா - பிரகாஷ் ராஜ்: விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் இருவரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2021, 3:55 pm
'ஜகமே தந்திரம்' படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Samayam Tamil Dhanush
Dhanush


நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது.

மாறன் படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் முதல் சென்னையில் துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, மித்ரன் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்டப் படங்களில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வனில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்: இணையத்தில் கசிந்த தகவல்!
இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்க பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ், அனிருத் கூட்டணி இந்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளது குறிப்பிடத்தக்கது.


மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மாறன் படப்பிடிப்பு முடிந்தவுடன் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், சேகர் கம்முலா, மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கங்களில் தலா ஒரு படங்களில் தனுஷ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்