ஆப்நகரம்

அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை.. ராஜாவுக்கு செக் பற்றி சேரன் ஆதங்கம்

ராஜாவுக்கு செக் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது பற்றி இயக்குனர் சேரன் ட்விட்டரில் கோபத்துடன் பேசியுள்ளார்.

Samayam Tamil 20 Mar 2020, 7:30 pm
ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சேரன். அவரது படங்கள் தற்போதும் ரசிகர்களால் பேசப்படுகிறது. சென்ற வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார் அவர்.
Samayam Tamil Cheran in Rajavukku Check Movie


நிகழ்ச்சியில் அவர் பேசும்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை அந்த படம் துவங்கவில்லை. அவர் நடித்திருந்த ராஜாவுக்கு செக் என்ற படம் ஜனவரி 24ம் தேதி வெளியானது. அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் தியேட்டர்களில் எதிர்பார்த்த வசூல் ஈட்டவில்லை.

இந்நிலையில் தற்போது OTT தளங்களில் ராஜாவுக்கு செக் வெளிவந்தது. அதை பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட படத்தை பார்க்க தியேட்டரில் கூட்டம் இல்லாமல் போனது வருத்தம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது பற்றி சேரன் ட்விட்டரில் ஒருவருக்கு ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார். விமர்சகர்கள் தான் இதற்கு காரணம் என மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் அவர்.

"அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை... எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா.... அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க... வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு" என பதிவிட்டுள்ளார் அவர்.


இது ஒருபுறம் இருக்க இயக்குனர் சேரன் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என செய்தி சில வாரங்கள் முன்பு வெளியானது. அது பற்றி தற்போது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்