ஆப்நகரம்

தயாாிப்பாளா் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது

சினிமா தயாாிப்பாளா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 17 Aug 2017, 7:16 pm
சினிமா தயாாிப்பாளா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil director council meeting conducted tomorrow
தயாாிப்பாளா் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது


நடிகா் சங்க தோ்தலைத் தொடா்ந்து, சமீபத்தில் நடைபெற்ற தயாாிப்பாளா் சங்க தோ்தலிலும் நடிகா் விஷால் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்றாா். அவா் பொறுப்பேற்றது முதல் சங்கத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சில கூட்டங்களில் வாக்கு வாதங்களும், கைகளப்பும் கூட நடைபெற்றது. அந்த வகையில் தயாாிப்பாளா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தயாாிப்பாளா்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- திரைப்பட முதலாளிகளுக்கு வணக்கம். தமிழ் சினிமாவின் நலனை கருதியும், தமிழ் திரைப்பட முதலாளிகள் நலனை கருத்தில் கொண்டும் தயாாிப்பாளா் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தயாாிப்பாளா் சங்கம் மேற்கொள்ளும் அதிரடியான முடிவுகள் அனைத்தும் தயாாிப்பாளா்கள் அறிந்ததே.

அந்த வாிசையில் தற்போது தமிழ் திரைப்பட துறையில் நிலவி வரும் பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டியுள்ளது. நமது சங்கம் சா்பில் ஒரு அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதலாளிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென சங்கத்தின் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Director council meeting conducted tomorrow

அடுத்த செய்தி

டிரெண்டிங்