ஆப்நகரம்

தலயை முரட்டு சிங்கிள் ஆக்கிட்டேன்: 'வலிமை' சீக்ரெட்டை ஓபன் பண்ணிய எச் வினோத்!

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் இடையே காதல் காட்சிகள் கிடையாது என தெரிவித்துள்ளார் இயக்குனர் எச் வினோத்.

Samayam Tamil 7 Oct 2021, 3:56 pm

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘வலிமை’ படம் குறித்து பல சீக்ரெட்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயக்குனர் எச் வினோத்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் 'வலிமை' படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் 'வலிமை' படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

அண்மையில் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து 'நாங்க வேற மாறி' என்ற பர்ஸ்ட் சிங்கிளும் முன்பாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Samayam Tamil Valimai
Valimai

காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகை?: மீண்டும் சர்ச்சையில் நடிகை சஞ்சனா கல்ராணி?

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எச்.வினோத் ‘வலிமை’ படம் பைக் ரேஸ் படம் இல்லை எனவும் படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் இடையே காதல் காட்சிகள் கிடையாது. அவர்கள் இருவரும் படத்தில் நண்பர்களாக தான் வருவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

'வலிமை' படத்தில் ஹியூமா குரோஷி, யோகி பாபு, குக்வித் கோமாளி புகழ், கார்த்திகேயா உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது. ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்