ஆப்நகரம்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு சொந்த ஊரில் சிலை திறப்பு

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் சிலையை கவிஞர் வைரமுத்து இன்று திறந்து வைத்தார்.

TNN 9 Jul 2017, 6:40 pm
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் சிலையை கவிஞர் வைரமுத்து இன்று திறந்து வைத்தார்.
Samayam Tamil director k balachander bronze statue opening ceremony in his birth place
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு சொந்த ஊரில் சிலை திறப்பு


தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்றால் அது கே.பாலசந்தர் தான். இவர் திருவாரூர் மாவட்டத்தில் 1930ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி பிறந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தெய்வதாய் என்ற படத்திற்கு டயலாக் எழுதுபவராக அறிமுகமானார். அதன் பிறகு இயக்குனராக மாறி தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்ற பெருமையை பெற்றார். இவர், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி மரணமடைந்தார்.

கலைநாட்டியவருக்குச் சிலைநாட்டுகிறோம்... pic.twitter.com/hgpw1iyvpf — வைரமுத்து (@vairamuthu) July 7, 2017 இந்நிலையில், இவரது சொந்த ஊரான நன்னிலத்தை அடுத்துள்ள நல்லமாங்குடியில் இவருக்கு சிலை அமைக்கப்பட்டிருந்தது. இன்று அவரது பிறந்தாளை முன்னிட்டு, கே.பாலசந்தரின் வெண்கல சிலை கவிஞர் வைரமுத்து கையால் மாலை அணிவித்து திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை திறப்பு விழாவில், சினிமா பிரபலங்கள், இயக்குனர்கள் மணிரத்னம், வசந்த் சாய், தயாரிப்பாளர்கள் பிரமிட் நட்ராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்