ஆப்நகரம்

விஜய் சேதுபதிக்கு ஜோடி தேடும் இயக்குனர்

இயக்குனர் கே.வி.ஆனந்த், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஏற்ற ஜோடியை தேடி வருகிறார்

TNN 24 Mar 2016, 1:02 pm
இயக்குனர் கே.வி.ஆனந்த், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஏற்ற ஜோடியை தேடி வருகிறார்.
Samayam Tamil director k v anand searches heroin for vijay sethupathy in his film
விஜய் சேதுபதிக்கு ஜோடி தேடும் இயக்குனர்


இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தை கே.வி. ஆனந்த் இயக்குவது உறுதியாகிவிட்டது. அதற்கான தொடக்க விழா பூஜையும் நடத்தி முடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கிய ‘அனேகன்’ல் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதில் மாஜி ஹீரோ கார்த்திக்கை வில்லனாக்கினார்.

அதேபோல், கடந்த 2007ம் ஆண்டு ‘வீராசாமி’ படத்தில் நடித்த டி.ராஜேந்தர் அதன்பிறகு நடிப்பு பக்கம் தலைகாட்டவில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் பாடல்கள் பாடினார். அவரை மீண்டும் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி படத்தில் முக்கிய வேடத்தில் டி.ராஜேந்தர் நடிக்கிறார்.

‘தனிஒருவன்’, ‘அனேகன்’ படங்களை தயாரித்த கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் பொறுப்பை எழுத்தாளர் சுபா மற்றும் கபிலன் வைரமுத்து ஏற்றுள்ளனர். தற்போது விஜய் சேதுபதிக்கு ஹீரோயினை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்