ஆப்நகரம்

‘குலேபகாவலி’ படத்தைப் பாராட்டிய பிரபல இயக்குனர்!

பிரபுதேவா நடிப்பில் வெளியாகியுள்ள ‘குலேபகாவலி’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

TNN 18 Jan 2018, 1:33 pm
பிரபுதேவா நடிப்பில் வெளியாகியுள்ள ‘குலேபகாவலி’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
Samayam Tamil director karthik subbaraj appreciate the movie gulebagavali
‘குலேபகாவலி’ படத்தைப் பாராட்டிய பிரபல இயக்குனர்!


பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில், ரேவதி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் தியேட்டர்களில் வெளியான விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. காரணம், எந்தவித புரமோஷனும் இல்லாமல் படம் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த ஜாலியான படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா, கல்யாண் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தக் காமெடிப் படத்தைத் தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்