ஆப்நகரம்

தனுஷை இயக்கும் பரியேறும் பெருமாள் இயக்குநர்!

பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் மாரி செல்வராஜ், அடுத்து நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார்.

Samayam Tamil 14 Nov 2018, 12:50 pm
அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் சாதியக் கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் இடம்பெற்றது.
Samayam Tamil cats
தனுஷை இயக்கும் பரியேறும் பெருமாள் இயக்குநர்!


இதனிடையே பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் மாரி செல்வராஜ், அடுத்து நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பரியேறும் பெருமாள் படம் பார்த்து, பிரம்மித்து விட்டேன். படத்தில் காட்டப்பட்டுள்ள வாழ்க்கைமுறையும், அதன் இயல்புத்தன்மையும் நம்மையும் அதனுடன் நெருங்க வைக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.


இந்நேரத்தில் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மாரி செல்வராஜ் போன்ற திறமையான இயக்குநருடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்