ஆப்நகரம்

ஊழலை ஒழிக்கும் சினிமாக்காரர்களா? நம்பாதீங்க - போட்டு உடைத்த இயக்குநர் மோகன்!

சென்னை: அரசியலுக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் சினிமாக்காரர்களை நம்பாதீர்கள் என்று இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Oct 2018, 9:49 pm
அரசியலுக்கு வரும் அனைவரும் கூறும் பொதுவான கருத்து ஊழலை ஒழிப்பேன் என்பது தான். தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் ஊழல் ஒழிப்பை தங்கள் கொள்கைகளில் ஒன்றாக வைத்திருக்கின்றன.
Samayam Tamil Mohan


சமீப காலமாக பல்வேறு திரைத்துறையினரும் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் தங்கள் முதல் வாக்குறுதியாக கூறுவது ஊழல் ஒழிப்பைத் தான். இதில் ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் விதிவிலக்கல்ல.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் தனது அரசியல் விருப்பம் குறித்து தெரிவித்தார். தான் முதலமைச்சராக வந்தால் நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்றார்.

ஒருவேளை முதலமைச்சராக வந்தால், முதல் நடவடிக்கையாக ஊழல், லஞ்சத்தை ஒழிப்பது இருக்கும் என்றார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குநர் மோகன், ஊழலை ஒழிப்பேன் அப்படின்னு சினிமாவை சார்ந்த யார் சொன்னாலும் நம்பாதீங்க.

நான் உட்பட. லஞ்சம் கொடுத்து ஊழல் செய்யாம படத்திற்கு வரிச்சலுகை வாங்க முடியாது இங்க. அரசாங்கமும் அதிக வரி சினிமாவிற்கு விதிப்பதால் இந்த ஊழலை தெரிந்தே செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு... என்று குறிப்பிட்டுள்ளார்.

Director Mohan asks not to believe actors who told abolish corruption.

அடுத்த செய்தி

டிரெண்டிங்