ஆப்நகரம்

Pathu Thala: சிம்பு மேல எந்த தப்பும் இல்லை.. நல்ல மனுஷன்: 'பத்து தல' இயக்குனர் விளக்கம்.!

சிம்புவின் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 13 Aug 2022, 6:49 pm
'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைவதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக இந்தப்படத்திற்காக காத்து வருகின்றனர்.
Samayam Tamil பத்து தல
பத்து தல


இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார். தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் நரதன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு,படத்தை இயக்க 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். 'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்ககின்றனர்.

Viruman: பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் 'விருமன்': கார்த்தி ஹாப்பி அண்ணாச்சி.!

இந்நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு பாதியிலே ஷுட்டிங்கில் இருந்து கிளம்பி விட்டதாகவும், இயக்குனர் சொல்லியும் கேட்காமல் ஒரு மாதம் டைம் கேட்டு படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டதாக கூறப்பட்டது.


இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவியது. ஆனால் தற்போது இயக்குனர் கிருஷ்ணா இதனை மறுத்துள்ளார். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம், நாங்கள் எதிர்பார்த்ததை விட சிம்பு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். மழை காரணமாகவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார். 'பத்து தல' படத்தை வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்